எழுத்தாளர்களின் விமர்சனங்கள்

1. எழுத்தாளர் ஜெயமோகன் 

எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் அவரது விமர்சனம்

2. எழுத்தாளர் இமையம்

‘மலைகள்’ இணைய இதழில் எழுத்தாளர் இமையத்தின் விமர்சனம்

எழுத்தாளர் இமையம் இணையதளத்தில் அவரது விமர்சனம்

3. எழுத்தாளர் ம.நவீன்

‘வல்லினம்’ இணைய இதழில் எழுத்தாளர் ம.நவீனின் விமர்சனம்

4. எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் 

எழுத்தாளர் ஆமருவியின் விமர்சனம் அவரது வலைத்தளம் ‘ஆ பக்கங்களில்’

5. எழுத்தாளர் மு. கோபி சரபோஜி  

‘திண்ணை’ இணைய இதழில் எழுத்தாளர் கோபி சரபோஜியின் விமர்சனம்

6. எழுத்தாளர் தயாஜி 

‘வல்லினம்’ இணைய இதழில் எழுத்தாளர் தயாஜியின் விமர்சனம்

7. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்

அழகு நிலாவின் ” ஆறஞ்சு  “ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை முழுமையாகக்கொண்ட கதைகள் என்று நினைத்தேன். ஆனால் அதில் உள்ள ஒரு மகாபாரத கதை அந்த முத்திரையை நழுவ விட்டு விட்டது. அடுத்தத் தொகுப்பில் அந்த முத்திரையை அழகுநிலா அழுத்தமாகப் பதிக்கவேண்டும்.

ஆனால் சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை இத்தொகுப்பு பதிவு செய்திருக்கின்றது என்பது முக்கியமே.வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள், வேலை நிமித்தமாய் சிரமங்கள், சொந்த ஊர் போகிற கனவு, சொந்த ஊரில் செத்துப்போகிறவர்கள் பற்றிய நினைவு ஏக்கங்கள், கஷ்டம் வரும்போது உதவும் பக்கத்து வீட்டு மனிதர்கள் , பக்கத்து வீட்டு அறியாத மனிதர்கள் , பூனை முதற்கொண்டு பிராணிகள் போன்றவற்றை கூர்ந்து கவனித்து கதைகளாக்கியிருக்கிறார்.

பள்ளிக்குழந்தைகளின் விரோதமான மன நிலை பற்றி ஒரு கதை பேசுகிறது. இந்தோனிசியா வேலைக்காரப் பெண்ணின் மீது கொண்ட கோபமும் அது சட்டென ஏதோவொரு கணத்தில் மறைவதும் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.  வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள்  பணத்தை சம்பாதித்து என்னவாகப்போகிறது என்று அங்கலாயித்துக் கொள்கிறார்கள்.  பூனை ஒன்று விபத்தில் சிக்கிக் கொள்ள  அந்நியமாகவே இருக்கிற பக்கத்து வீடுகள் ஒன்று சேருகின்றன. அம்மாவின் மரணத்திற்குப் பின் தனிமையில் வாடும் அப்பாவிற்கு ஒரு பூனை நண்பனாவதை வீட்டில் இருப்பவர்கள் கண்டு கொள்கிறார்கள். அம்மாவை அதிகம் கண்டு கொள்ளாதவன் சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்த பின் அம்மாவின் முக்கியத்துவத்தை உணர்கிறான்.

இப்படி பல கதைகள் . அசட்டுத்தனமான காதல் . அசட்டுத்தனமான அனுபவங்கள் . புது மலர்கள் கட்டுபவளுக்கு ஏற்படும் அசட்டுத்தனத்தை ஒரு கதையில் சொல்கிறார்.சிங்கப்பூர் சூழல்-  குடும்பம்  , வேலை, பக்கத்து வீடுகள்,தொடர்வண்டி பிரயாண அனுபவங்கள் என்று கதைகள். எளிமையான வெளிப்பாட்டில்  அதிகம் சிரம்ப்படுத்தாத நடையில் விசயங்களைச் சொல்லிப்போகிறார். எளிமையாக உள்வாங்கிக் கொள்ளும் அனுபவங்களாய் இருக்கின்றன.பெண்களின் பிரச்னைகளை அந்தப்பார்வையிலேயே சொல்லியிருப்பதும் நன்று.