அறிமுகம்

எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள செண்டங்காடு என்ற கிராமம். தாயின் பெயர் தமிழரசி. தாய் தமிழாசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தந்தை அமரர் திரு.பஞ்சாட்சரம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கராக பணியாற்றியவர். தங்கையின் பெயர் மணிவிழி. தம்பியின் பெயர் திருமாலவன்.

பட்டுக்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பிறகு திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் (Regional Engineering College, Trichirappalli) வேதிப் பொறியியலில் இளங்கலை பட்டமும் (B.Tech in Chemical Engineering), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (School of Energy) எரியம் பேணல் மற்றும் மேலாண்மையில் முதுகலை பட்டமும் (M.Tech on Energy Conservation and Management) பெற்றேன். மூத்த வடிவமைப்பு பொறியாளராக சென்னையிலும் சிங்கையிலும் பணியாற்றி இருக்கிறேன்.

2005 ஆம் ஆண்டில் கணவரின் வேலையை முன்னிட்டு குடிபெயர்ந்து தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன். கணவரின் பெயர் செந்தில்நாதன். இவர் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகன் விக்னேஷ். மகள் மதியரசி.